என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிரேம் குமார்
நீங்கள் தேடியது "பிரேம் குமார்"
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ’96’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது. ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள்.
இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்தது. பள்ளி பருவ காதல், நட்பு என அழகாக திரைக்கதை அமைத்திருந்தார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.
தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கென்யாவில் நடந்து வருகிறது. லைப் ஆப் ராம் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் இடையேயான மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #96TheMovie #96TeluguRemake
விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர் இல்லாமல் நூறாவது நாள் கொண்டாடியது வரை பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.
தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று, இசை.
படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை மாற்றிவிட்டு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் எனத் தயாரிப்பாளர் கூறிவருகிறார்.
இதனால், ‘தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு மற்றும் இயக்குனர் பிரேம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ எனவும் செய்திகள் வருகின்றன. அனேகமாக இயக்குனர் மாற்றப்படலாம் என்கிறார்கள். #96TheMovie #96TeluguRemake #Sharwanand #Samantha #PremKumar #GovindVasantha
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `96' படத்தின் 100 நாள் வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய பார்த்திபன், `96' படத்தின் அந்த ஒரு காட்சிக்காக காத்திருந்ததாக கூறினார். #96TheMovie #VijaySethupathi
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம் குமார் உட்பட `96’ படத்தின் பிரபலங்கள் பங்கு பெற்றனர். அவர்களுடன் திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பார்த்திபன்,
‘காதலிக்கிறதுக்கு காதலியோ, காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். ‘யமுனை ஆற்றிலே’ பாடலோட ஒரிஜினல் பதிப்பைவிட இந்த படத்துல அந்த பாட்டு எப்போ வரும் என்றுதான் காத்துக் கொண்டு இருந்தேன். அந்த காட்சியை பார்த்த பிறகு இயக்குனருடைய காலை தொட்டு கும்பிடணும் என்று நினைத்தேன். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு” என்று விஜய் சேதுபதியையும் திரிஷாவையும் மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்கச் சொன்னார்.
`காதலே காதலே’ பாடலின் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டனர். “இதுதான் படத்துடைய கிளைமாக்ஸ்” என்றார் விஜய் சேதுபதி. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Parthiban
பார்த்திபன் பேசிய வீடியோவை பார்க்க:
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். #96TheMovie #VijaySethupathi
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் பிரேம் குமார், கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணிதரன், பி.எஸ்.மித்ரன், லெனின் பாரதி மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
துக்ளக் படத்தை இயக்கும் டெல்லி பிரசாத்
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது,
`இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக்’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும், திரிஷாவும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Thuglak
விஜய் சேதுபதி பேசிய வீடியோவை பார்க்க:
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படம் 100 நாட்களை கடந்த நிலையில், இதனை படக்குழு பிரம்மாண்ட விழாவாக எடுத்து கொண்டாடுகிறது. #96TheMovie #VijaySethupathy #Trisha
கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெறும் படங்களின் ஆயுளே அதிகபட்சம் 2 அல்லது 3 வாரங்கள் தான் என்ற நிலை உருவாகிவிட்டது. பைரசி, தியேட்டர் எண்ணிக்கை குறைவு, அதிக படங்கள் உருவாகுவது போன்ற காரணங்களால் பெரிய ஹீரோக்களின் படங்களே 50 நாட்களை தொடுவதில்லை.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 96. பள்ளி பருவத்தில் உண்டாகும் முதல் காதலை நெகிழ்ச்சியுடன் கூறி இருந்த 96 படம் டிவியில் ஒளிபரப்பான பின்னரும் கூட ரசிகர்களிடையே வரவேற்பு குறையவில்லை. கடந்த ஜனவரி 10-ந் தேதி 96 படம் 100 நாட்களை தொட்டுவிட்டது.
அதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். தர்மதுரை, விக்ரம் வேதா வரிசையில், விஜய் சேதுபதிக்கு 3-வது 100 நாட்கள் படமாக 96 அமைந்துவிட்டது. #96TheMovie #VijaySethupathy #Trisha
பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பு விரைவில் உருவாகவிருக்கும் நிலையில், அதுகுறித்த பரவிய வதந்திக்கு பிரேம் குமார் விளக்கமளித்துள்ளார். #96TheMovie #96TeluguRemake
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த்தும் நடிக்கிறார்கள்.
பிரேம் குமாரே தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். 96 படத்தில் கதை 22 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து கதை பயணித்ததால் அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து இருந்தார்கள். விஜய் சேதுபதி, திரிஷாவின் சிறு வயது கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
ஆனால் தெலுங்கு பதிப்பில் கதையின் பிளாஷ்பேக் 2009-ஆம் ஆண்டுடன் நின்றுவிட உள்ளதாகவும், அதாவது பள்ளிக்காதலுக்குப் பதிலாக கல்லூரி காதலை படமாக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. எனவே ஷர்வானந்த், சமந்தா இருவரும் தங்கள் இளமைத் தோற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.
இந்த செய்திக்கு பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். ‘96 தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்காக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழில் இருந்த பள்ளிக்காதல் தான்’ என்று கூறி உள்ளார். #96TheMovie #96TeluguRemake #PremKumar #Sharwanand #Samantha
பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் கூறும் புகாருக்கு 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். #96Movie #PremKumar
96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், ‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ‘96’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன்.
அதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதன் போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.
இந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை. படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து, விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்? சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் அசுரவதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.
இந்த கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட பைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்?
இந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம் .. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா,,?
இது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினர் இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கதை திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இது வரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.’என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X